;
Athirady Tamil News

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு

0

டோக்கியோ,

ஜப்பானில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானின் அதிக மக்கள்தொகை கொண்ட ஹொன்ஷு தீவின் கடற்பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இரவு 7.48 மணியளவில் ரிக்டர் அளவில் 6.3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

60 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 39.360 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 143.242 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கைகள் எதுவும் தற்போது வரை விடுக்கப்படவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.