கூடுதல் வருவாய் ஈட்டிய இலங்கை சுங்கம்
கடந்த ஜூன் மாதத்திற்கான வருமான இலக்கை மிஞ்சிய வகையில், இலங்கை சுங்கம் 225.2 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது.
இலங்கை சுங்கம் விடுத்துள்ள தகவலின்படி, ஜூன் மாதத்திற்கான வருமான இலக்காக 184.8 பில்லியன் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், அந்த வருமான இலக்கையும் தாண்டி 225.2 பில்லியன் ரூபாய் வருமானத்தை சுங்கத் திணைக்களம் திரட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.