;
Athirady Tamil News

ஹோர்முஸ் நீரிணை பயணிக்கும் கப்பல்களுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை!

0

இஸ்ரேல் அமெரிக்காவுடன் சேர்ந்து ஈரான் மீது மேற்கொண்ட தாக்குதலை அடுத்து ஹோர்முஸ் பாதை மூடப்பட்டுள்ளதாக 2 ஆயிரத்திற்கும் அதிகமான கப்பல்கள் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாலுமிகளுடன், கடலில் தவிக்கின்றன.

இந்நிலையில் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் அப் பாதையினூடாகப் பயணிக்கும் எவரும் கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, ஹோர்முஸ் பாதையை கடக்க முயன்ற மூன்று கப்பல்களைத் திருப்பி அனுப்பியதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை திறந்திருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி கூறிய பொய்களைத் தொடர்ந்து,”அந்த கப்பல்கள் நீரிணையைக் கடக்க முயன்றதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை குற்றம் சாட்டியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.