இலங்கையை உலுக்கிய மட்டக்களப்பு கிணறு விவகாரம் ; கொழும்பில் சிக்கிய முக்கிய நபர்
மட்டக்களப்பு நெல்லிக்காட்டு வயல் பகுதியில் இடம்பெற்ற பாழடைந்த கிணறு கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர், நேற்று (29) கொழும்பில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாணப் பெருங்குற்றத் தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி இதனை உறுதிப்படுத்தினார்.
தீவிரமடையும் விசாரணை
மட்டக்களப்பு – நெல்லிக்காடு பகுதியில் கிணறு ஒன்றில் இருந்து பெண் ஒருவர் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபருக்கு உதவியதாக கூறப்படும் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 20-ஆம் திகதி கொக்கட்டிச்சோலை, நெல்லிக்காட்டு வயல் பிரதேசத்திலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து, வவுணதீவு கொத்தியாவலைப் பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளம் தாய் ஒருவர் உயிருடனும், ஏற்கனவே காணாமல் போனதாகக் கருதப்பட்ட மற்றொரு பெண் சடலமாகவும் மீட்கப்பட்டனர்.
அத்துடன் அந்த இளம் தாயின் 3 வயது 4 மாதங்கள் நிரம்பிய சிறுமி, வயல் பகுதியில் அழுதுகொண்டிருந்த நிலையில் உயிருடன் மீட்கப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பில் 26 வயதுடைய பெண், அவரது 34 வயதுடைய கணவர், 22 வயதுடைய தம்பி உட்பட 5 பேர் 24 மணித்தியாலங்களுக்குள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து இரு ஆட்டோக்கள், கார் ஒன்று, கோடரி மற்றும் கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், மறைத்து வைக்கப்பட்டிருந்த மயக்க மருந்துகள் மீட்கப்பட்டதுடன் முச்சக்கர வண்டி ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்திய மேலதிக விசாரணையில், குறித்த சந்தேக நபர் கைது செய்யப்படடுள்ளார்.
அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வத்தளை பகுதியில் வைத்துச் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக மட்டக்களப்பிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.