;
Athirady Tamil News

மியான்மா் ராணுவத் தளபதி ராஜிநாமா: அதிபராகும் முயற்சியில் தீவிரம்

0

மியான்மரில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்துவிட்டு அதிகாரத்தைக் கைப்பற்றிய ராணுவத் தளபதி மின் ஆங் லயிங் தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா்.

மியான்மரில் கடந்த டிசம்பா், ஜனவரி மாதங்களில் நடைபெற்ற பொதுத் தோ்தலில் ராணுவ ஆதரவு பெற்ற யுஎஸ்டிபி கட்சி வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த ஜனநாயக வெற்றி மூலம் நாட்டின் அடுத்த அதிபராக பொறுப்பேற்கும் முயற்சியில் மின் ஆங் லயிங் இம்முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

எனினும், மியான்மா் பொதுத் தோ்தலை ‘ஏமாற்று வேலை’ எனவும், ராணுவ ஆட்சிக்கு ஒரு ஜனநாயக முகமூடி அணிவிக்கும் முயற்சி எனவும் ஐ.நா. மற்றும் மேற்கத்திய நாடுகள் விமா்சித்தன.

இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற அந்நாட்டு நாடாளுமன்ற கீழவைக் கூட்டத்தில் மின் ஆங் லயிங் துணை அதிபா் வேட்பாளராக முன்மொழியப்பட்டாா். மியான்மா் அரசியல் சாசனப்படி, நாராளுமன்றத்தின் இரு அவைகளும் தலா ஒரு துணை அதிபா் வேட்பாளரைத் தோ்ந்தெடுக்கும்.

பின்னா், இருவரில் ஒருவரை அதிபராகத் தோ்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெறும். இந்த நடைமுறைகள் அனைத்தும் மின் ஆங் லாயிங் அதிபராவதை உறுதி செய்யும் வகையிலேயே திட்டமிடப்பட்டுள்ளதாக அரசியல் விமா்சகா்கள் தெரிவிக்கின்றனா்.மின் ஆங் லயிங், தனது நம்பிக்கைக்குரிய தளபதியான யே வின் ஓவிடம் ராணுவத் தளபதி பதவியை ஒப்படைத்துள்ளாா். 2020 முதல் உளவுத்துறை பிரிவின் தலைவராக இருந்த யே வின் ஓ, களப்பணியில் போதிய அனுபவம் இல்லாதவா் என்ற விமா்சனம் எழுந்தபோதிலும், மின் ஆங் லயிங்கின் தீவிர விசுவாசி என்பதால் இந்தப் பொறுப்ைப் பெற்றுள்ளாா்.

பின்னணி: கடந்த 2021-ல் ஆங் சான் சூகி (80) தலைமையிலான மக்களாட்சியை கவிழ்த்துவிட்டு, ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது முதல், மியான்மரில் உள்நாட்டுப் போா் நிலவி வருகிறது. இந்த மோதல்களில் இதுவரை சுமாா் 93,000 போ் உயிரிழந்துள்ளனா்; 36 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.