;
Athirady Tamil News

வடமராட்சி கிழக்கு மணற்காடு சவுக்கங்காட்டில் பயங்கர தீ: தீயை அணைக்கப் போராடிய பொதுமக்கள் மற்றும் இராணுவத்தினர்!

0
வடமராட்சி கிழக்கு மணற்காடு சவுக்கங்காட்டில் நேற்று திங்கட்கிழமை பாரியளவிலான தீப்பரவல் ஏற்பட்டது.

இத் தீப்பரவல் சம்மந்தமாக பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளர் உதயகுமார் யுகதீசன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் பிரதேச சபையின் தண்ணீர் பவுசர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்றிருந்தார். இருப்பினும் அப்பகுதி மணற்பாங்கான பிரதேசமாகையால் பவுசர்கள் உட் செல்வதில் சிரமங்கள் ஏற்பட்டிருந்தது.

ஆதனால் அப்பகுதி மக்கள், பொலிசார் மற்றும் இராணுவத்தினரும் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.