;
Athirady Tamil News

இலங்கைப் பெண்களின் தலைமுடியில் பாதரசமா; வெளியான பகீர் தகவல்

0

இலங்கைப் பெண்களின் தலைமுடியில் குறிப்பாக புத்தளம் பகுதியில் வாழ்வோருக்கு பாதரசம் உலோகம் அபாயகரமான அளவில் காணப்படுவதாகப் புதிய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சுற்றுச்சூழல் நீதிக்கான மையத்தின் தலைவரும், சிரேஷ்ட ஆலோசகருமான ஹேமந்த விதானகே தெரிவிக்கையில்,

சூழலிலும் கடல்வாழ் உயிரினங்களிலும் தேங்குவதாகவும் இறுதியில் உணவுச் சங்கிலி ஊடாக மனித உடலுக்குள் நுழைவதற்கும் வாய்ப்பு இருப்பதை இந்தத் தரவுகள் காட்டுகின்றன. இது மிகவும் பாரதூரமான நிலையாகும்.

நுரைச்சோலை, பனியடிய, நாரக்கல்லிய மற்றும் புத்தளம் களப்புப் பகுதிகளைச் சூழவுள்ள மக்கள் ஏற்கனவே பாதரச நச்சுத்தன்மைக்கு ஆளாகியிருக்கலாம். ஜப்பானில் ஏற்பட்ட ‘மினமாட்டா’ போன்றதொரு பாரிய சுகாதார நெருக்கடிக்கு இட்டுச் செல்லக்கூடும்.

தரம் குறைந்த நிலக்கரி பயன்பாட்டால் கடற்கரையோர நீர் மற்றும் களப்புகளில் உள்ள மீன்களில் பாதரச அளவு அதிகரிக்கக்கூடும்.

மேலும் சுகாதார அமைச்சின் மௌனமும் இத்தகைய தரம் குறைந்த நிலக்கரியைச் சார்ந்திருப்பது பாரிய பொருளாதார மற்றும் சுகாதார விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.