;
Athirady Tamil News

மாணவரிடம் அத்துமீறிய அதிபர் கைது

0

அகுரம்பொடப் பகுதியில், ஒரு மாணவர் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் அத்துமீறல் சம்பவம் தொடர்பாக, பாடசாலை அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மாணவர் அதிபரால் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறி, 9-ஆம் வகுப்பு பயிலும் அச்சிறுவனின் தந்தை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் முறைப்பாடு ஒன்றைச் செய்திருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த அதிகார சபையிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், மஹாவெலப் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சந்தேக நபரை கைது செய்தனர்.

சம்பந்தப்பட்ட மாணவர் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட 50 வயதுடைய பாடசாலை அதிபர், நௌல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.