மட்டக்களப்பு கிணறு கொள்ளையர்கள் தொடர்பில் நீதிமன்றின் அதிரடி
மட்டக்களப்பு – நெல்லிக்காடு பகுதியிலுள்ள கிணறு ஒன்றில் இருந்து பெண்ணொருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சரம்குடா பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண், அவரது 34 வயதுடைய கணவர், 22 வயதுடைய அவரது சகோதரர் மற்றும் பிரதான சந்தேக நபராக கருதப்படும் முச்சக்கர வண்டி சாரதி ஆகியோருக்கே விளக்கமறியல் உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டி சாரதி ஆகியோருக்கே விளக்கமறியல் உத்தரவு
கொள்ளையிடப்பட்ட நகைகளை கொள்வனவு செய்த குற்றச்சாட்டில் ஏற்கனவே விளக்கமறியலில் இருந்த இரண்டு நகையக உரிமையாளர்களும் தொடர்ந்து 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இதேவேளை, கொள்ளையர்களுக்கு மருந்துகளை வழங்கிய குற்றச்சாட்டில் கொழும்பு – வத்தளை பகுதியில் கைது செய்யப்பட்டவரை, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காவல்துறையின் தடுப்புக் காவலில் மூன்று நாட்கள் வைத்து தொடர்ந்து விசாரணை செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட தரப்பினரைக் கொண்டு சந்தேகநபர்களை அடையாளம் காணும் ஆள் அடையாள அணிவகுப்பு இன்று நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டது.