;
Athirady Tamil News

ஹஜ், வெசாக் பண்டிகை: சிறைக்கைதிகளுக்கு சலுகை

0

ஹஜ் பெருநாள் மற்றும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு சிறைகளில் உள்ள கைதிகள் தங்களது உறவினர்களைச் சந்திப்பதற்கான விசேட வாய்ப்பொன்றை சிறைச்சாலைகள் திணைக்களம் வழங்கியுள்ளது.

இதற்கமைய, மே 28 மற்றும் மே 30 ஆகிய இரு தினங்களிலும் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் இந்த விசேட பார்வையாளர் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இத்தினங்களில் கைதிகளைப் பார்ப்பதற்கு வரும் உறவினர்கள், அவர்களுக்கான உணவு மற்றும் இனிப்புப் பண்டங்களைக் கொண்டு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவை ஒரு கைதிக்கு மாத்திரம் போதுமான அளவில் வழங்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அனைத்து சிறைச்சாலைகளிலும் இந்த நடவடிக்கைகள் தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்கவும், சிறைச்சாலை விதிகளுக்கு உட்பட்டும் முன்னெடுக்கப்படும் என சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.