;
Athirady Tamil News

கடலுக்கு சென்ற களுதாவளை 19 வயதுடைய இளைஞர் மாயம்

0

களுவாஞ்சிகுடியில் மீன் பிடிக்க சென்ற 19 வயதுடைய இளைஞர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் காணாமல் போனவரின் உறவினர்களால் நேற்று (24) களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிலுள்ள களுதாவளை சிறி முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே நேற்றுமுன்தினம் கடலுக்கு சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

இதனையடுத்து குறித்த கடற்பகுதியில் தேடுதல் இடம்பெற்ற நிலையில், அவர் சென்ற படகு கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், அந்த இளைஞரை காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.