;
Athirady Tamil News

ஈரானுக்கு உதவும் நாடுகள் மீது 50% வரி: டிரம்ப்

0

ஈரானுக்கு ஆயுதங்கள் விநியோகிக்கும் நாடுகள் மீது 50% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரானுடனான போரை இரண்டு வாரங்களுக்கு நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று அதிகாலையில் அறிவித்தார். இந்த நிலையில், ஈரானுக்கு ஆயுதங்கள் விநியோகிக்கும் நாடுகள் மீது வரி விதிக்கப்படும் என டிரம்ப் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

இதுகுறித்து, டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, ஈரானுக்கு ராணுவ ஆயுதங்களை வழங்கும் எந்தவொரு நாட்டின் மீதும் உடனடியாக வரி விதிக்கப்படும். அமெரிக்காவில் விற்கப்படும் அவர்களின் அனைத்து பொருள்கள் மீதும் உடனடியாக 50 சதவிகித வரி விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா – ஈரான் இடையே சுமார் 6 வாரங்களாக போர் நீடித்து வந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணையை ஈரான் திறக்காவிட்டால், 48 மணிநேரத்துக்குள் ஈரானின் ஒட்டுமொத்த நாகரிகமும் அழிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்தார்.

இந்த நிலையில், இரு நாடுகளுக்குமிடையே இரண்டு வாரங்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் புதன்கிழமை அதிகாலையில் அறிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.