;
Athirady Tamil News

மதச் சடங்கு பெயரில் குழந்தைகளுக்கு வன்முறை ; இணையத்தில் வைரலாகும் நெஞ்சைப் பதறவைக்கும் காணொளி

0

இந்தியாவில் கடவுள் நம்பிக்கை மற்றும் மதச்சடங்குகள் என்ற பெயரில் பச்சிளம் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் கொடூரமான செயல்கள் இன்றும் தொடர்கின்றன.

அந்த வகையில், தற்போது இணையத்தில் வைரலாகி வரும் காணொளி ஒன்று காண்போரின் மனதை உலுக்கியுள்ளது.

அந்த காணொளியில், பூசாரி போன்ற ஒருவர் கொதிக்கும் பாலை இரண்டு பச்சிளம் குழந்தைகள் மீது ஊற்றும் காட்சி பதிவாகியுள்ளது.

பாலூட்டும் பருவத்தில் இருக்கும் அந்தப் பிஞ்சு குழந்தைகள், கொதிக்கும் பாலின் சூடு தாங்க முடியாமல் கதறி அழுகின்றன.

இருப்பினும், கொஞ்சமும் இரக்கமின்றி அந்த நபர் மீண்டும் மீண்டும் அவர்கள் மீது கொதிக்கும் பாலை ஊற்றுகிறார்.

அக்குழந்தைகளை அவர்களது தந்தை எனச் சந்தேகிக்கப்படும் ஒருவரே பிடித்துக் கொண்டிருப்பது இன்னும் வேதனையளிப்பதாக உள்ளது.

இந்தச் சம்பவம் எங்கு நடைபெற்றது என்பது குறித்த விபரங்கள் வெளியாகாத நிலையில், சமூக வலைத்தளங்களில் இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், இத்தகைய கொடூரமான சடங்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.