கால்வாய்க்குள் விழுந்த விமானப்படை அதிகாரி ; முதலைகளின் செயலால் காத்திருந்த அதிர்ச்சி ; தமிழர் பகுதியில் சம்பவம்
இங்கினியாகல, கலுகொல்ல பகுதியில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் விழுந்ததில் காணாமல்போன விமானப்படை சர்ஜென்ட் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக இங்கினியாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலத்தை முதலைகள் உட்கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேடுதல் நடவடிக்கை
பல்லமவிலிருந்து கின்னியகல நோக்கிச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள், பல்லம பஹலந்த வீதியிலுள்ள கால்வாயில் விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
விழுந்ததில் மோட்டார் சைக்கிள் செலுத்துனரான சர்ஜென்ட் நீரில் மூழ்கி காணாமல் போன நிலையில், பொலிஸாரினால் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் அம்பாறை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.