இந்தியாவில் கைதான கரந்தெனிய ராஜு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்
இந்தியாவில் கைது செய்யப்பட்ட ‘கரந்தெனிய ராஜு’ என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிறப்பு அதிரடிப் படையினரால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டார்.
கொலை உட்பட 15-க்கும் மேற்பட்ட குற்றங்களுக்காகக் பொலிஸார் தேடப்பட்டு வந்த ராஜு, சமீபத்தில் இந்தியாவில் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார்.
இவர், மற்றொரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ‘கரந்தெனிய சுத்தாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் சில காலமாக துபாயில் பதுங்கியிருந்து, கிரீஸுக்குத் தப்பிச் செல்லும் நோக்கத்தில் இந்தியாவிற்கு வந்திருந்த போது இந்தியப் பாதுகாப்புப் படைகளால் அவர் கைது செய்யப்பட்டார்.