;
Athirady Tamil News

திருப்பதி கலப்பட லட்டு குறித்து 7-ம் வகுப்பு தேர்வில் கேள்வி

0

திருப்பதி: திருப்​பதி ஏழு​மலை​யான் கோயி​லில் கடந்த ஜெகன்​மோகன் ரெட்​டி​ ஆட்​சி​யின் போது, கலப்பட நெய் வாங்கப்பட்டதாக தற்​போதைய ஆந்​திர முதல்​வர் சந்​திர​ பாபு நாயுடு அறிவித்ததை தொடர்ந்து இந்த விவ​காரம் பக்தர்களிடையே பேரதிர்வை ஏற்​படுத்​தி​யது.

இதுதொடர்​பாக சிபிஐ விசா​ரணைக்கு உச்​ச நீதிமன்​றம் உத்தரவிட்​டது. இதனை தொடர்ந்து சிபிஐ அதி​காரி​கள் திருப்​பதி மற்​றும் திரு​மலை​யில் ஆய்வு நடத்தி சிலரை கைதும் செய்​தனர். இந்​நிலை​யில் சமீபத்​தில் ஆந்​தி​ரா​வில் நடை​பெற்ற 7ம் வகுப்பு சமூக அறி​வியல் தேர்​வில், திருப்​பதி கலப்பட லட்டு பிர​சாதம் குறித்து 10-வது கேள்​வி​யாக கேட்​கப்​பட்​டுள்​ளது.

அதாவது “திருப்​பதி லட்டு பிர​சாதத்​தில் கலப்​படம் நடந்தது குறித்து முழு விசாரணை தேவையா?” எனக் கேட்டு, ஒரு வரியில் பதிலளிக்கும்படி கூறப்பட்டுள்ளது. இதற்கு பல மாணவர்கள் லட்டு பிரசாதத்தில் கலப்படம் நடந்ததாகவும், இது குறித்து முழு விசாரணை நடத்தி உண்மையை தெரியப்படுத்த வேண்டுமெனவும் பதில் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.