;
Athirady Tamil News

இமாச்சல் நிலச்சரிவில் கார் சிக்கியதில் 13 பேர் உயிரிழப்பு

0

சிம்லா: இமாச்சல பிரதேசத்தின் குலு நகரில் இருந்து சம்பா மாவட்டத்தில் உள்ள தொலைதூர பாங்கி பள்ளத்தாக்கு நோக்கி நேற்று சுமோ கார் சென்று கொண்டிருந்தது. இதில் 6 மாத குழந்தை உட்பட 15 பேர் பயணம் செய்துள்ளனர்.

லகால்-ஸ்பிதி மாவட்டம் உதய்ப்பூர்-கில்லார் சாலையில் காகு-டு நாலா என்ற பகுதிக்கு அருகே கனமழை காரணமாக மலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பாறைகளும் மண்ணும் சுமோ கார் மீது சரிந்து விழுந்ததில் கார் இடிபாடுகளுக்குள் புதைந்தது.

தகவல் கிடைத்தவுடன் காவல்துறை மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில், 13 பேர் உயிரிழந்தனர். இருவர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். இவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் போக்குவரத்தை சீரமைக்கும் பணி நடைபெறுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.