;
Athirady Tamil News

தமிழர் பகுதியில் குடும்பஸ்தருக்கு எமனான காட்டு யானை

0

காட்டு யானையின் தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளதாக செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, செட்டிகுளம் பொலிஸ் பிரிவின் ஆனவிழுந்தாவ பகுதியில் 25 திகதி நேற்று (25) சனிக்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலதிக விசாரணை
சம்பவத்தில் உயிரிழந்தவர் நேரியகுலம பகுதியைச் சேர்ந்த 58 வயதுடையவர் என்பது ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

சம்பவத்தை அடுத்து அப்பகுதி மக்கள் திரண்டு வந்து உடலத்தை மீட்டதுடன், செட்டிகுளம் பொலிஸாருக்கும் வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கும் தகவல் வழங்கினர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் செட்டிகுளம் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.