;
Athirady Tamil News

யாழ் போதனா வைத்தியசாலையில் அரிய சம்பவம் ; ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்ற தாய்

0

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை தாய் ஒருவர் பெற்றெடுத்துள்ள நிகழ்வு பெரும் மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

செம்பியன்பற்று பகுதியைச் சேர்ந்த இந்த தாய், திருமணமாகி சுமார் 10 ஆண்டுகள் குழந்தை இல்லாமல் இருந்த நிலையில், நேற்றைய தினம் (17.04.2026) இரண்டு ஆண் குழந்தைகளையும் இரண்டு பெண் குழந்தைகளையும் ஒரே பிரசவத்தில் பெற்றெடுத்துள்ளார்.

வைத்தியசாலை தகவலின்படி, தாயும் குழந்தைகளும் தற்போது வைத்தியர்களின் கண்காணிப்பில் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அரிய நிகழ்வு யாழ் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவர்களிடையேவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீண்ட காத்திருப்புக்குப் பின் ஒரே நேரத்தில் நான்கு குழந்தைகள் பிறந்த இந்த சம்பவம், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் சந்தோஷத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.