இலங்கையில் பயங்கரம்; 2000 ரூபாவிற்காக இடம்பெற்ற படுகொலை !
பலாங்கொடை – சீதகல சந்தி பகுதியில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் இடம்பெற்ற சூதாட்டத்தின் போது, 2000 ரூபா பந்தயம் தொடர்பாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலுக்கு உள்ளாகி பலத்த காயமடைந்த நபர், இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் சீதகல, பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை மூன்று சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று திங்கட்கிழமை (20) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபரைக் கைது செய்வதற்காக பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.