;
Athirady Tamil News

நாட்டை சூழும் கனமழை ; மின்னல், பலத்த காற்றுக்கு எச்சரிக்கை

0

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதேநேரம் தென் மாகாணத்தின் சில இடங்களில் காலை வேளையிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், குருநாகல் மாவட்டத்திலும் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கு அதிகமான பலத்த மழை பதிவாகக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், அநுராதபுரம், குருநாகல் மற்றும் பதுளை மாவட்டங்களிலும் அதிகாலை நேரங்களில் மூடுபனி நிலை காணப்படலாம்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.