;
Athirady Tamil News

தெற்கு சூடானில் விமான விபத்து – 14 பேர் பலி

0

ஜுபா,

கிழக்கு ஆப்பிரிக்காவில் சூடான் அருகே அமைந்துள்ள நாடு தெற்கு சூடான். அந்நாட்டின் யொயி நகரில் இருந்து தலைநகர் ஜுபாவுக்கு நேற்று சிறிய ரக விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் விமானி உள்பட 14 பேர் பயணித்தனர்.

இந்நிலையில், தலைநகர் ஜுபா அருகே நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென விமானம் வனப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான உடன் விமானம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 14 பேரும் தீயில் கருகி உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் விமான விபத்தில் உயிரிழந்த 14 பேரின் உடல்களையும் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மோசமான வானிலை காரணமாக விமானம் வனப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.