;
Athirady Tamil News

பொத்துவில் மற்றும் பானம பகுதிகளில் பாதுகாப்புக் குழுக்களின்   செயல்பாடுகள்  ஆராய்வு

0

பொத்துவில் பகுதியில் பொதுமக்கள்  பாதுகாப்புக் குழுக்களின் செயல்பாடுகள் தொடர்பான  ஒன்றுகூடல் அண்மையில்  நடைபெற்றது.

39 கிராம அலுவலர் பிரிவுகளை  உள்ளடக்கிய பொத்துவில் மற்றும் பானம  பொலிஸ் பிரிவு  பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பு குழு  உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

குறித்த கூட்டத்திற்கு பிரதம விருந்தினராக அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல கலந்து கொண்டு உரையாற்றினார்.

இதன் போது  பாதுகாப்புக் குழுக்களின் தலைவர்கள் மற்றும் செயலாளர்களிடம் பல்வேறு ஆலோசனைகளை பெற்றதுடன் எதிர்கால  திட்டங்கள்  குறித்தும் கேட்டறிந்து கொண்டார்.

அத்துடன்  சில பாதுகாப்பு குழுக்களின் செயல்பாடுகள்  உரிய  தரத்தில் இல்லை என்பதை அவதானித்த அவர் அவற்றை மீள புனரமைப்பதற்கான ஆலோசனைகளை வழங்கினார்.

மேலும்  பொத்துவில் உதவி பொலிஸ் அத்தியட்சகர்  மற்றும் பொத்துவில் பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி ஆகியோர்  பாதுகாப்புக் குழுக்களின் பிரச்சினைகளைத் தாமதமின்றித் தீர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

அத்துடன் இப்பகுதிகளில் பெருகி வரும் போதைப்பொருள் அச்சுறுத்தல் மற்றும்   வெளிநாட்டுப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதன் முக்கியத்துவம் குறித்து  முக்கியமாகக் கூட்டத்தில் ஆராயப்பட்டது.

குறித்த  ஒன்றுகூடல் விழிப்புணர்வு நிகழ்வில் பொத்துவில் பிரதேச  செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல்   மகா சங்கத்தினர்  கத்தோலிக்கப் பாதிரியார்கள்  மௌலவிகள்  அரச அதிகாரிகள் பொத்துவில் மற்றும் பானம பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரிகள் மற்றும்  கிராம அலுவலர்கள் உள்ளிட்ட  பொலிஸ் அதிகாரிகளும்  கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.