11 மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை!
நாட்டில் 11 மாவட்டங்களுக்கான மின்னல் தாக்கம் குறித்து இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த அறிக்கையானது இன்று (30) இரவு 11.30 மணிவரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மின்னல் தாக்கம் குறித்து அவதானமாக இருக்கும்படி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.