;
Athirady Tamil News

ஏஐ தாக்கம்: இன்போசிஸ் நிறுவனத்தில் ஆட்குறைப்பா? தலைமை அதிகாரி விளக்கம்

0

செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ காரணமாக முன்னணி ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருகின்றன. ஆரக்கிள், அமேசான், மெட்டா போன்ற பெருநிறுவனங்களும் இந்த பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், பிரபல ஐடி நிறுவனமான இன்போசிஸ் இது தொடர்பாக விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.

அதாவது,இன்போசிஸ் தலைமை நிர்வாக அதிகாரி சலில் பரேக், இந்த ஆண்டு ஆட்குறைப்பு செய்யப்படாது என்று உறுதி அளித்துள்ளார். ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் வேலைகள் குறையும் என்று அஞ்சத் தேவையில்லை என்றும், மாறாக புதிய வாய்ப்புகள் உருவாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், இந்த ஆண்டு 20 ஆயிரம் புதிய பட்டதாரிகளை பணியமர்த்தவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும் ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இன்போசிஸ் நிறுவனம் ரூ.750 கோடி முதலீட்டில் புதிய கிளை நிறுவனத்தை நிறுவ உள்ளது. இதன்மூலம் 7 ஆயிரம் பேர் புதிதாக பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.