;
Athirady Tamil News

மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கிய விமானம்… வெளிவந்துள்ள நடுங்க வைக்கும் பின்னணி

0

சீனாவில் கடந்த 2022ல் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானமானது, விபத்தில் சிக்கியதன் அதிரவைக்கும் பின்னணி தற்போது வெளியாகியுள்ளது.

எரிபொருள் விநியோகம்
மொத்தமாக 132 பேர்கள் கொல்லப்பட்ட அந்த விமான விபத்தானது, நடுவானில் விமானத்தின் எரிபொருள் விநியோகம் துண்டிக்கப்பட்டதாலையே என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

NTSB எனப்படும் அமெரிக்க தேசியப் போக்குவரத்துப் பாதுகாப்பு வாரியம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

China Eastern விமானம் 8,839 மீற்றர் உயரத்தில் சீரான வேகத்தில் பறந்துகொண்டிருந்தபோது, ​​அதன் இரு என்ஜின்களிலும் உள்ள எரிபொருள் சுவிட்சுகள் நிறுத்தும் நிலைக்கு மாற்றப்பட்டன என்றே NTSB குறிப்பிட்டுள்ளது.

அதாவது, திட்டமிட்டே விபத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது என இது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த பல தசாப்தங்களில் சீனாவில் நிகழ்ந்த மிக மோசமான வான்வழிப் பேரழிவாக இது இருந்தாலும், இந்தச் சம்பவத்திற்கான காரணம் நீண்ட காலமாக ஒரு மர்மமாகவே இருந்து வந்துள்ளது.

மேலும், தேசியப் பாதுகாப்பு குறித்த கவலைகளைக் காரணம் காட்டி, இச்சம்பவம் குறித்த இறுதி அறிக்கையை சீனா இன்னும் வெளியிடவில்லை. NTSB அறிக்கையில், விமானத்தின் எரிபொருள் துண்டிக்கப்பட்ட சூழலில், விமானத்தின் வேகம் படிப்படியாக சரிவடைந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

செங்குத்தாகக் கீழே
எரிபொருள் சுவிட்சுகள் என்பவை விமானத்தின் இயந்திரங்களுக்குள் செல்லும் எரிபொருள் ஓட்டத்தை ஒழுங்குபடுத்தும் கட்டுப்பாட்டுக் கருவிகள் ஆகும்; இவற்றை விமானிகள் இயந்திரங்களை இயக்க அல்லது நிறுத்தப் பயன்படுத்துகின்றனர்.

மார்ச் 2022-ல், யுன்னானின் தலைநகரான குன்மிங்கிலிருந்து புறப்பட்ட அந்த பயணிகள் விமானம், அதே பிற்பகலில் குவாங்சோவில் தரையிறங்கவிருந்தது.

மேலும், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வானில் இருந்த அந்த விமானம், தனது இலக்கை நெருங்கிக் கொண்டிருந்தபோது, ​​திடீரெனத் தனது பயண உயரத்திலிருந்து செங்குத்தாகக் கீழே விழுந்தது.

வெளியானத் தரவுகளின் அடிப்படையில், மூன்று நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் அந்த விமானம் ஆயிரக்கணக்கான மீற்றர் கீழே இறங்கியுள்ளது.

இந்தச் சம்பவம் சீனாவில் நடைபெற்றதாலும், இதில் ஒரு சீன விமான நிறுவனம் சம்பந்தப்பட்டிருந்ததாலும், சீனாவின் சிவில் விமானப் போக்குவரத்து நிர்வாகம் (CAA) விசாரணைகளை முன்னெடுத்தது.

ஆனால் அந்த விமானம் அமெரிக்காவில் வடிவமைக்கப்பட்டு கட்டுமானம் நடந்ததால் NTSB தனிப்பட்ட முறையில் விசாரணையை முன்னெடுத்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.