வெளிநாட்டவர்களுக்கு வீடு வழங்குவோருக்கு வெளியான அறிவித்தல்
வெளிநாட்டவர் ஒருவருக்கு வீடு அல்லது ஏதேனும் சொத்துக்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு வழங்கினால், அது குறித்து அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வுட்லர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சில வெளிநாட்டவர்கள் இவ்வாறு வீடுகளை வாடகைக்கு பெற்று நிதி சார்ந்த குற்றச் செயல்களில் ஈடுபடும் நிலைமை காணப்படுவதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.