இணைய விளம்பரங்களால் குறிவைத்து ஏமாற்றப்படும் இளைஞர்கள் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கடந்த மூன்று நாட்களில் இணையவழிக் குற்றங்கள் தொடர்பாக 157 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து, இலங்கை வேலைவாய்ப்பு இணையதளங்களில் வெளியிடப்பட்ட பல இணையவழி வேலை விளம்பரங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இணையக்குற்றக்கும்பல்கள் மோசடி
இந்த விளம்பரங்கள் குறைந்த தகுதிகளுடன், வழக்கத்திற்கு மாறாக அதிக சம்பளத்தை ரூ. 100,000 ஐத் தாண்டி வழங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வேலைவாய்ப்புகளை பெற சாதாரண தகுதிகள் கூட போதுமானவை என்றும் கூறப்பட்டு மோசடியில் ஈடுபடுகின்றமை தெரியவந்துள்ளது.
மியான்மர் மற்றும் துபாயில் செயல்படும் இணையக்குற்றக்கும்பல்கள், தகவல் தொழில்நுட்பம் தொடர்பான வேலைவாய்ப்பு என்ற போர்வையில் இவ்வாறு இளைஞர்களைக் குறிவைத்து செயற்படுகி்ன்றமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்காக இணையவழிக் குற்றவாளிகள் ஆட்சேர்ப்பு உத்திகளை விளம்பரங்கள் மூலம் மேற்கொள்வதாகவும் புலனாய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.