;
Athirady Tamil News

உக்ரைன் மீது 100-க்கும் மேற்பட்ட டிரோன்களால் ரஷியா தாக்குதல்

0

கீவ்

நேட்டோ அமைப்பில் சேரும் உக்ரைனின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர், ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதனை முடிவுக்கு கொண்டு வர பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் அதில் பலனில்லை. உக்ரைனும் பதிலுக்கு தாக்குதல் நடத்தி வருகிறது.

தொடர்ந்து, போரானது 4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைன் மீது ரஷியா 100-க்கும் மேற்பட்ட டிரோன்களை கொண்டு தாக்குதல் நடத்தி உள்ளது. அவற்றுடன் ஏவுகணைகளை கொண்டும் தாக்கியுள்ளது. 2-ம் உலக போர் வெற்றி தின நினைவு கொண்டாட்டங்களை முன்னிட்டு போர்நிறுத்தத்திற்கு ரஷியா தயாராகி வருகிறது. இந்த சூழலில், ரஷியா தாக்குதலை நடத்தி உள்ளது.

இதற்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்து உள்ளார். அவர் பேசும்போது, போர் தற்காலிக நிறுத்தம் என ரஷியா அறிவித்து விட்டு இந்த தாக்குதலை நடத்துவது அதன் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு செயலையே பிரதிபலிக்கிறது.

உக்ரைனின் ஜபோரிஜ்ஜியா, டோனெட்ஸ்க், கார்கீவ், நிப்ரோபெட்ரோவ்ஸ்க் மற்றும் பொல்தவா ஆகிய பகுதிகளில் ரஷிய படைகள் ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்தி உள்ளன என கூறியுள்ளார். இதில், உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் உள்ள குடிமக்களின் வீடுகள், எரிசக்தி கட்டமைப்புகள் மற்றும் தொழிற்சாலை தளங்கள் மீதும் தாக்குதல் பரவலாக நடந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.