நிந்தவூர் மத்தியஸ்த சபைக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட 27 மத்தியஸ்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு
நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ எம் அப்துல் லத்தீப் தலைமையில் நிந்தவூர் மத்தியஸ்த சபைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மத்தியஸ்தர்களுக்கான நியமன கடிதங்கள் கடந்த புதன்கிழமை(6) வழங்கி வைக்கப்பட்டது.
நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஜெகராஜன் கலந்து கொண்டார்.
கௌரவ அதிதியாக நிந்தவூர் பிரதேச உதவி பிரதேச செயலாளர் திருமதி ரீ.ஜெஸான், அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களுக்கான மத்தியஸ்த பயிற்றுவிப்பாளர் எம் ஐ எம் ஆஸாத், நிந்தவூர் மத்தியஸ்த சபையின் புதிய தவிசாளர் ஏ.ஏ.ஹமீட், உப தவிசாளர் சட்டத்தரணி ஏ.எம் பாயீஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது 233 ம் இலக்க நிந்தவூர் மத்தியஸ்த சபைக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்ட 27 மத்தியஸ்தர்களுக்கான நியமனக் கடிதங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
