;
Athirady Tamil News

யாழ் . போதனா வைத்தியசாலையில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் ; பல மில்லியன் பெறுமதியான மருந்துகள் தீக்கிரை

0

யாழ் . போதனா வைத்தியசாலை மருந்து களஞ்சிய சாலையை துப்பரவு செய்யும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

போதனா வைத்தியசாலையில் மருந்து களஞ்சிய சாலை இன்றைய தினம் அதிகாலை தீ பிடித்து எரிந்துள்ளது.

கடும் சேதம்
இதனால் பல மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துகள் தீயில் எரிந்துள்ள நிலையில் சுமார் 5 மணி நேர தீவிர போராட்டத்தின் பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது மிஞ்சிய மருந்து பொருட்களை மீட்கும் முயற்சியிலும் , களஞ்சிய சாலையை துப்பரவு செய்து , அதனை ஒழுங்குபடுத்தும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

மருந்து களஞ்சிய சாலைக்குள் எளிதில் தீ பற்ற கூடிய அசிட் , உள்ளிட்டவையும் காணப்பட்டமையால் தீ வேகமாக பரவியுள்ளது, இதனால் பல மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துகள், தீயில் ஏரிந்துள்ள நிலையில் கட்டடம் உள்ளிட்டவையும் கடும் சேதமடைந்துள்ளன.

தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை தற்போது மருந்து களஞ்சிய சாலையை சுத்தம் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதேவேளை , குறித்த களஞ்சிய சாலை பகுதிக்குள் அண்மையில் மருந்துகளை பாதுகாப்பாக வைத்திருக்க குளிரூட்டப்பட்ட அறை (Cool Room ) அமைக்கப்பட்டதாகவும் , அதில் ஏற்பட்ட மின் கசிவு , இந்த தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.