;
Athirady Tamil News

யாழில். ஹெரோயினுடன் கைதானவருக்கு 7 வருட கடூழிய சிறை

0
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றவாளிக்கு 07 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது 
தெல்லிப்பளை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1கிராம் 440 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து , எதிரியை குற்றவாளியாக கண்ட மன்று, 07 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்ததுடன் , ஒரு இலட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தை செலுத்த தவறின் 12 மாத கால சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என மேல் நீதிமன்று குற்றத்தீர்ப்பு அளித்துள்ளது
You might also like

Leave A Reply

Your email address will not be published.