;
Athirady Tamil News

உளவுத்துறை அச்சம்: சீனப் பரிசுகளை குப்பையில் வீசிய அமெரிக்க அதிகாரிகள்

0

பீஜிங்,

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது 2 நாள் சீன பயணத்துக்கு பின்னர் நேற்று நாடு திரும்பினார். அவருடன் ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் சென்ற எலான் மஸ்க், ஆப்பிள் நிறுவன தலைமை அதிகாரி டிம் குக், என்வீடியா சிப் நிறுவன தலைவர் ஜென்சன் ஹூவாங் உள்ளிட்டோரும் டிரம்புடன் நாடு திரும்பினர்.

இந்தநிலையில் சீனாவில் டிரம்ப் உள்பட விருந்தினர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து பரிசுப்பொருட்களையும் குப்பைத் தொட்டியில் வீசி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டிரம்ப் மற்றும் அவரது குழுவினர் தங்களுக்கு சீன அதிகாரிகள் வழங்கிய அனைத்து பரிசுகளையும், பொருட்களையும் பீஜிங் விமான நிலையத்திலேயே குப்பைத் தொட்டியில் வீசிவிட்டுச் சென்றனர்.

உளவுப் பார்க்கப் பயன்படுத்தப்படும் ‘ஸ்பைவேர்”, கண்காணிப்பு ‘சிப்’கள் அல்லது ஹேக்கிங் மென்பொருட்கள் ஏதேனும் இந்த பொருட்களில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற தீவிர பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அச்சத்தின் காரணமாக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான வீடியோ மற்றும் படக்காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.