;
Athirady Tamil News

இங்கிலாந்து: இளைஞரை குத்திக்கொன்ற சீக்கியருக்கு ஆயுள் தண்டனை

0

லண்டன்,

இங்கிலாந்து நாட்டின் சவுத்ஹம்டன் பகுதியை சேர்ந்த இளைஞர் ஹெண்ட்ரி நவ்க் (வயது 18). கல்லூரி மாணவரான இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் தேதி இரவு 11.30 சவுத்ஹம்டன் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த இங்கிலாந்து குடியுரிமைபெற்ற சீக்கியரான விக்ரம் திக்வா (வயது 23) ஹெண்ட்ரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இனவெறி ரீதியாக வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் சீக்கியர் விக்ரம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஹெண்ட்ரியை பலமுறை குத்தியுள்ளார்.

கைது
இந்த கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த ஹெண்ட்ரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விக்ரமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த கொலை குறித்த வழக்கு லண்டன் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கு குறித்து நேற்று நடத்த விசாரணையில் விக்ரம் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் குற்றவாளி விக்ரமிற்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.