லாஃப்ஸ் எரிவாயு விலை தொடர்பில் அறிவிப்பு
ஜூன் மாதத்திற்கான லாஃப்ஸ் வீட்டு சமையல் எரிவாயு விலையில் எந்த வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 5 கிலோகிராம் லாஃப்ஸ் வீட்டு சமையல் எரிவாயுவின் விலை 2,500 ரூபாவாகவும் 12.5 கிலோகிராம் லாஃப்ஸ் வீட்டு சமையல் எரிவாயுவின் விலை 6,245 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேவேளை ஜூன் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனமும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.