;
Athirady Tamil News

தாக்குதல்கள் உடனடியாக ரத்து; ஈரான் தொடர்பில் ட்ரம்பின் புதிய அறிவிப்பு

0

ஈரான் மீது நடத்தவிருந்த திட்டமிடப்பட்ட வான்வழித் தாக்குதல்களையும் குண்டுவெடிப்புகளையும் தான் உடனடியாக ரத்து செய்துள்ளதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்க இராணுவத்தின் அபாச்சி ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, ஈரான் மீது நேற்று இரவு மிகக் கடுமையான குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்த அமெரிக்கா முழுவீச்சில் தயாராகி வந்தது.

இதனால் உலகப்போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியிருந்த நிலையில், தனது ‘டிரூத் சோஷியல்’ பக்கத்தில் அதிபர் ட்ரம்ப் அதிரடிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ஈரான் இஸ்லாமிய அரசுடனான பேச்சுவார்த்தைகள் அந்த நாட்டின் மிக உயர்மட்டத் தலைமைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அவர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில், அமெரிக்க ஜனாதிபதி என்ற முறையில் ஈரான் மீது நடத்தவிருந்த திட்டமிடப்பட்ட வான்வழித் தாக்குதல்களையும் குண்டுவெடிப்புகளையும் தான் உடனடியாக ரத்து செய்துள்ளதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.