;
Athirady Tamil News

இமயமலை பிராந்தியத்துக்கு இரட்டை ஆபத்து: வறட்சி, திடீர் வெள்ளம் ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை

0

காத்மாண்டு,

இந்து குஷ் இமயமலை பிராந்தியத்தில் இந்த ஆண்டு பருவ மழை குறைவாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அங்கு வறட்சி மற்றும் திடீர் வெள்ளம் ஆகிய இருவேறு ஆபத்துகள் ஒரே நேரத்தில் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் அதிர்ச்சி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த பிராந்தியமானது இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் உள்பட 8 நாடுகளில் பரந்து விரிந்து, சுமார் 200 கோடி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. புவி வெப்பமயமாதல் காரணமாக இங்கு வழக்கத்தை விட வெயில் அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளது.

நீண்ட நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவினாலும், திடீரென குறுகிய காலத்தில் கொட்டித் தீர்க்கும் அதிபயங்கர மழையால் கடுமையான நிலச்சரிவுகளும், திடீர் பெருவெள்ளமும் ஏற்படும் என்று ‘இசிமோட்’ பருவநிலை அமைப்பு எச்சரித்துள்ளது. இதனால் விவசாயம் மற்றும் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படலாம் என்பதால் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.