;
Athirady Tamil News

வயலை உழுதுவிட்டுத் திரும்பிய இரு பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த கதி

0

புத்தளம் மாவட்டத்தின் வனாதவில்லுவ, மயிலங்குளம் பகுதியில் இடம்பெற்ற துயரமான விபத்தில், உழவு இயந்திரத்தின் கீழ் சிக்கிய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மயிலங்குளம் பகுதியைச் சேர்ந்த, இரண்டு பிள்ளைகளின் தந்தையான 30 வயதுடைய நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர், கூலி அடிப்படையில் மற்றொருவருக்குச் சொந்தமான உழவு இயந்திரத்தை இயக்கி வயல் உழும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

சம்பவத்தன்று வயல் உழும் பணியை நிறைவு செய்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது, உழவு இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து வயல்களுக்கு நீர் கொண்டு செல்லும் கால்வாய்க்குள் கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, அதிக வேகத்தில் பயணித்ததே இந்த விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

விபத்தின் போது சாரதி உழவு இயந்திரத்தின் அடியில் சிக்கிய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வனாதவில்லுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.