;
Athirady Tamil News

இறுதியான போர் நிறுத்த ஒப்பந்தம் ; ஈரான் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

0

அமெரிக்காவுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் கையொப்பமாக, லெபனான் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இருந்து இஸ்ரேல் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்று ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா – ஈரான் இடையே இறுதியான போர் நிறுத்த ஒப்பந்தம், ஸ்விட்சர்லாந்தில் வரும் வெள்ளிக்கிழமை இருதரப்பினாலும் கையொப்பமிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் விவரங்கள் இன்னும் உத்தியோகபூா்வமாக வெளியிடப்படாத நிலையில், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார்.

‘இப்போரின்போது இஸ்ரேல் ஆக்கிரமித்த லெபனான் பகுதிகளில் இருந்து அதன் படைகள் திரும்பப் பெறப்படாவிட்டால், போர் முழுமையாக முடிவுக்கு வந்ததாக ஏற்றுக்கொள்ள முடியாது.

இஸ்ரேலின் தொடா் ஆக்கிரமிப்பு ஒப்பந்தத்தை மீறும் செயலாகும்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.