;
Athirady Tamil News

தமிழக மக்களுக்கு குட் நியூஸ்… மின்தடைக்கு முடிவு கட்ட முதல்வர் விஜய் புதிய திட்டம்!

0

தமிழகத்தில், குறிப்பாக சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் மின்தடை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கில் முதல்வர் விஜய் அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற எரிசக்தித் துறை ஆய்வுக் கூட்டத்தில், மாநிலத்தில் மின் பற்றாக்குறை இல்லை என்றும், பழைய மின் சாதனங்கள், நிலத்தடி கேபிள் பழுதுகள், அதிகரித்த மின் நுகர்வு மற்றும் பராமரிப்பு பணிகள் காரணமாகவே மின்தடை ஏற்படுவதாக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

77 Fuse-Off Call மையங்கள்

மின்தடை புகார்களை விரைவாக சரிசெய்ய கூடுதலாக 77 Fuse-Off Call மையங்கள், 7 புதிய பழுதுநீக்கும் குழுக்கள், 125 மின் சீரமைப்பு வாகனங்கள் மற்றும் சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் செயல்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், ‘மின்னகம்’ சேவை மையம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் 24 மணி நேர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மின் விநியோக கட்டமைப்பை வலுப்படுத்த ரூ.2,275 கோடி மதிப்பிலான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மாநிலம் முழுவதும் ரூ.10,109 கோடியில் 121 புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட துணை மின் நிலையங்களின் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், ரூ.15,032 கோடியில் 231 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக 15,058 மின்வாரிய பணியாளர்களை நியமிக்கவும், மின் சாதனங்கள் கொள்முதலை விரைவுபடுத்தவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதன் மூலம் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் மின்தடை பிரச்சனை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.