;
Athirady Tamil News

யாழ்ப்பாணம் – கொழும்பு விழிப்புணர்வு சைக்கிள் பயணம்: இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார்!

0
தற்கொலை இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் எனும் தொனிப்பொருளில் இந்தியாவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிய சைக்கிள் பயணத்தை இன்று காலை ஆரம்பித்தார்.
யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் இருந்து காலை 7.30 மணியளவில் யாழ் இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி கொடி அசைத்து சைக்கிள் பயணத்தை ஆரம்பித்து வைத்தார்.
தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தமீம் அன்சாரி என்ற விழிப்புணர்வு சைக்கிள் ஓட்ட வீரர் இது வரை 63421 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தை மிதிவண்டியில் கடந்து சாதனை படைத்துள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது.
பல விழிப்புணர்வு சைக்கிளோட்டங்களை இவர் தமிழ்நாடு முழுவதும் மேற்கொண்டுள்ளதுடன் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்த இந்த விழிப்புணர்வு பயணம் “தற்கொலை இல்லாத சமூகம்” என்பதை உருவாக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பயணத்தின் நோக்கங்களாக – மனநலம் விழிப்புணர்வு , தற்கொலை தடுப்பு , மனிதநேயம் மற்றும் கருணை , நம்பிக்கை மற்றும் மனநல நலன், உலக அமைதி என்பன அமைகின்றன. இவரது இப்பணயத்தின் செய்தியாக , “ஒவ்வொரு வாழ்க்கையும் மதிப்புமிக்கது. நீங்கள் தனியாக இல்லை. நம்பிக்கையைத் தேர்ந்தெடுக்கவும்.” என்பதேயாகும்.
 
You might also like

Leave A Reply

Your email address will not be published.