;
Athirady Tamil News

தொழில் முயற்சியாளர்கள்   பயிற்சி வேலைத்திட்டம் முன்னெடுப்பு

0

சந்தைப்படுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் அஸ்வெசும பயனாளி மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களின் பொருட்டு ஆளுமை விருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும்   பயிற்சி வேலைத்திட்டம் கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.

இதன் போது  சமுர்த்தி திட்ட முகாமையாளர் எஸ்.எல். அஸீஸ்  இணைப்பில் சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர் ஏ.சீ.அன்வர் தலைமையில்  நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதியாக பிரதேச செயலக கணக்காளர் அமிர் அலி கலந்து கொண்டார்.

தொழில் முயற்சியாளர்களுக்கு  தேவையான தொழில்   சந்தை  மற்றும்  நிதி மேலாண்மை   போன்றவை  இப்பயிற்றி வேலைத்திட்டத்தில் விளக்க  விரிவுரை வழங்கப்பட்டதுடன்   பேசும் பயிற்சிகள் , கேள்வி பதில் ஊடாக நேரடி வழிகாட்டல் போன்றவற்றையும் மேற்கொள்ளப்பட்டு பங்கேற்பாளர்களின்   நம்பிக்கையும் திறனும் அதிகரிக்க வளவாளர்களால் விரிவுரைகள் நடத்தப்பட்டது .

மேலும் தேசிய முயற்சியாண்மை அபிவிருத்தி அதிகார சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.சி.எம். நபீல், சிறு கைத்தொழில் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் எச்.எல். அப்துல் ஜலீல் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டதுடன்  சமுர்த்தி வங்கி சங்க முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.எம்.அம்சார்,  திட்ட உதவியாளர் ஏ.எஸ்.எம். ஜஃபர், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எஸ். சனுபா ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.