;
Athirady Tamil News

நெடுந்தீவு கடலில் தத்தளித்த நிலையில் மீட்கப்பட்ட தமிழக கடற்தொழிலாளர்கள்

0
கடல் கொந்தளிப்பு காராணமாக , தமிழக கடற்தொழிலாளர்களின் படகொன்று ,நெடுந்தீவு கடற்பரப்பில் கரையொதுங்கிய நிலையில் , படகில் இருந்த 11 கடற்தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர் 
தமிழக கடற்தொழிலாளர்களின் படகொன்று நெடுந்தீவு கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ளதாக , கடற்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு சென்ற கடற்படையினர் , படகில் இருந்த கடற்தொழிலாளர்களை மீட்டுள்ளனர்.
படகினை மயிலிட்டி மீன்பிடித்துறைமுக பகுதிக்கு எடுத்துள்ள செல்ல நடவடிக்கை எடுத்துள்ள கடற்படையினர் , மீட்கப்பட்ட கடற்தொழிலாளர்களை , கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.