;
Athirady Tamil News

இலங்கை ஆசிரியர் சேவையில் உள்ளோருக்கு வெளியான முக்கிய தகவல்

0

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் கடமையாற்றும் இலங்கை ஆசிரியர் சேவையைச் சேர்ந்த அதிகாரிகளுக்கான முதலாவது வினைத்திறன் தடை தாண்டல் பரீட்சை எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.

தடை தாண்டல் பரீட்சை
ஆசிரியர்களின் பதவியுயர்வுக்கு அவசியமான மூன்று கட்ட வினைத்திறன் தடை தாண்டல் பரீட்சைகளின் முதற்கட்டமாக இது நடத்தப்படுகிறது.

ஆசிரியர் சேவையில் பதவியுயர்வு பெறுவதற்கு ஆசிரியர்கள் 3 வினைத்திறன் தடை தாண்டல் பரீட்சைகளுக்கு முகம் கொடுக்க வேண்டும் என்பதுடன், இதற்காக 10 பாடநெறிகளை (Modules) கற்க வேண்டும்.தரம் 2, தரம் I ஆசிரியர்களுக்காக 3 பாடநெறிகளைக் கொண்ட 3ஆவது வினைத்திறன் தடை தாண்டல் பரீட்சை நடத்தப்படும்.

முதலாவது வினைத்திறன் தடை தாண்டல் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நாளை மறுதினம் (22) முதல் ஜூலை மாதம் 17ஆம் திகதி வரை இணையவழியில் ஏற்றுக்கொள்ளப்படும்.

விண்ணப்பதாரர்கள் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.