;
Athirady Tamil News

சீறிப்பாய்ந்த 300-க்கும் அதிகமான ட்ரோன்கள்: மூடப்பட்ட விமான நிலையங்கள்

0

இந்நிலையில் ரஷ்யா தலைநகர் மாஸ்கோவை நோக்கி சுமார் 300க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் மூலம் உக்ரைன் ராணுவம் நேற்று தாக்குதலில் ஈடுபட்டது.

இதில் 59 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா கூறியுள்ளது. இதைத் தொடர்ந்து மாஸ்கோவின் நான்கு சர்வதேச விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாகவும் ரஷ்யா அறிவித்துள்ளது.

உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, உக்ரைனின் தெற்கு ஒடெசா பிராந்தியத்தின் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவி ரஷ்யா தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் ஒருவர் இறந்துவிட்டதாகவும், மூன்று பேர் காயமடைந்ததாகவும் உக்ரைனின் ஒடெசா பிராந்திய ஆளுநர் ஓலே கிப்பர் தெரிவித்தார்.

ரஷ்யா நடத்திய தாக்குதலில் ஒடெசா மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாயப் பண்ணை முழுவதுமாக சேதமடைந்து, அவசரகால மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.