ஆந்திரா: நின்ற லாரி மீது வேன் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு
ஹைதராபாத்: ஹைதராபாத்தை சேர்ந்த கதிரி வெங்கடேஸ்வருலு என்பவர் குடும்பத்தினருடன் ஒரு வேனில் தனது உறவினர் இறந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், மாசர்லாவுக்கு சென்றார்.
இந்நிலையில் மாசர்லா நகர வனம் எனும் இடத்தில் நேற்று அதிகாலையில் இவர்களின் வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்புறம் வேகமாக மோதியது.
இந்த விபத்தில் கதிரி வெங்கடேஸ்வருலு, இவரது மனைவி கதிரி உட்பட 4 பேர் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.