;
Athirady Tamil News

NDB வங்கியின் 13.5 பில்லியன் ரூபா நிதி மோசடி; அறிக்கை வெளியானது

0

NDB வங்கியின் நிதி கொடுக்கல் வாங்கல்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் 13.5 பில்லியன் ரூபா பெறுமதியான சந்தேகத்திற்குரிய கொடுக்கல் வாங்கல்கள் நிதி மோசடி தொடர்பான தடயவியல் ஆய்வு அறிக்கையின் இடைக்கால அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதாக NDB வங்கி அறிவித்துள்ளது.

இந்தத் தடயவியல் ஆய்வானது ‘Deloitte Touche Tohmatsu India LLP’ நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

13.5 பில்லியன் ரூபா நிதி மோசடி
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் அடிப்படை மற்றும் தர்க்க ரீதியாக இருக்கும் என்றும், ஒப்பந்தத்தின் பிரகாரம் குறித்த அறிக்கையின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படுவதாகவும் NDB வங்கி தெரிவித்துள்ளது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகத்திற்குரிய கொடுக்கல் வாங்கல்களின் மொத்தப் பெறுமதி 13,579,664,684 ரூபா (சுமார் 13.5 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமானது) என NDB வங்கி வெளிப்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக NDB வங்கி முன்னதாக கடந்த ஏப்ரல் 2, 6 மற்றும் 23 ஆகிய திகதிகளில் பங்குச் சந்தைக்கு அறிவித்திருந்தது. இது தொடர்பான மேலதிக தகவல்களைத் தேவைக்கேற்ப எதிர்காலத்தில் பங்குச் சந்தைக்குத் தெரியப்படுத்துவதாகவும் NDB வங்கி தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.