;
Athirady Tamil News

தும்கூரில் காருக்குள் பெட்ரோல் குண்டுவைத்து காதலியைக் கொல்ல முயன்ற காதலன் மரணம்

0

பெங்களூரு: கர்​நாட​கா​வில் திரு​மணம் செய்து கொள்ள மறுத்த காதலியைக் காருக்​குள் பெட்​ரோல் குண்டு வைத்து கொல்ல முயன்ற காதலன் தீப்​பிடித்து எரிந்து உயி​ரிழந்​தார்.

கர்​நாடக மாநிலம் உத்​தரா கன்னட மாவட்​டத்​தில் உள்ள அங்​கோலா​வைச் சேர்ந்​தவர் நாகேந்​திரா (30). இவர் அதே ஊரை சேர்ந்த ரம்​யாவை (26) கடந்த 6 ஆண்​டு​களாகக் காதலித்து வந்​தார். இந்​நிலை​யில், அவருக்கு வீட்​டில் திருமண ஏற்​பாடு​கள் நடந்​த​தால் நாகேந்​தி​ராவைப் பிரிய முயன்​ற​தாகத் தெரி​கிறது.

இதனால் கோபமடைந்த நாகேந்​திரா பெங்​களூரு​வில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் மருந்தக ஊழிய​ராக பணி​யாற்றி வந்த ரம்​யா​வைச் சந்​திப்​ப​தற்​காக நேற்று பெங்​களூரு வந்​தார். அவரை தன்​னுடன் சொந்த ஊருக்கு வரு​மாறு வாடகை காரில் அழைத்து சென்​றார்.

தும்​கூர் மாவட்​டத்​தில் சிரா அருகே தேசிய நெடுஞ்​சாலை​யில் சென்ற போது நாகேந்​தி​ரா​வுக்​கும் ரம்​யா​வுக்​கும் இடையே காதல் தொடர்​பாக வாக்​கு​வாதம் ஏற்​பட்​டது. அப்​போது ரம்யா திரு​மணம் செய்து கொள்ள மறுத்​துள்​ளார். இதனால் நாகேந்​திரா ரம்​யா​வைக் கத்​தி​யால் தாக்​கிய​தால், அவர் ஓடும் காரில் இருந்து கீழே குதித்​தார்.

இதனால் ஓட்​டுநர் பிர​வீன் காரை நிறுத்தி கீழே இறங்​கி​யுள்​ளார். எனவே ஆத்​திரமடைந்த நாகேந்​திரா தன் பையில் மறைத்து வைத்​திருந்த பெட்​ரோல் வெடிகுண்டை ரம்யா மீது வீச முயன்​றார். ஆனால் எதிர்​பா​ராத வித​மாக குண்டு வெடித்​த​தால் கார் தீப்​பிடித்​த​தில் நாகேந்​திரா சம்பவ இடத்​திலே உயி​ரிழந்​தார்.

இதுகுறித்து தகவலறிந்த தும்​கூர் போலீ​சார் காயமடைந்த ரம்​யா​வை​யும் ஓட்​டுநர் பிர​வீனை​யும் மீட்டு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​தித்​தனர்.

மேலும் வழக்​குப் பதிவு செய்​து, சிசிடிவி கேமரா பதிவு​களை ஆராய்ந்​தனர். வெடி பொருட்​கள் மற்​றும் குண்​டு​வெடிப்​புக்​கான காரணம்​ குறித்​து வி​சா​ரித்​து வருகின்​றனர்​.

You might also like

Leave A Reply

Your email address will not be published.