;
Athirady Tamil News

ஒரே நேரத்தில் ஒரே மருத்துவமனை 14 தாதியர்கள் கர்ப்பம்; வைராகும் புகைப்படம்!

0

அமெரிக்கா ஓஹியோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் (Miami Valley Hospital) பணிபுரியும் செவிலியர்கள், அங்குள்ள நீண்டகால சாதனை ஒன்றை முறியடித்துள்ளனர்.

அமெரிக்காவின் Ohio பகுதியில் உள்ள Miami Valley வைத்தியசாலையில் ஒரே நேரத்தில் 17 தாதியர்களும் கர்ப்பம் கர்ப்பமடைந்துள்ளமை பேச்சு பொருளாக மாறியுள்ளது. 17 தாதியர்களும் வரிசையாக Baby Bumps உடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மியாமி வேலி மருத்துவமனை
‘பீப்பிள்’ (PEOPLE) இதழுக்கு அளிக்கப்பட்ட செய்திக்குறிப்பின்படி, ஓஹியோவின் டேட்டன் நகரில் உள்ள மியாமி வேலி மருத்துவமனையின் (Miami Valley Hospital) மகப்பேறு பிரிவில் பணிபுரியும் 17 செவிலியர்கள் ஒரே நேரத்தில் கர்ப்பமாக உள்ளனர்.

அதேவேளை 2019-ஆம் ஆண்டில் ஒரே நேரத்தில் அங்கு பணி புரிந்த செவிலியர்கள் 11 பேர் கர்ப்பமாக இருந்தபோது அந்தப் பிரிவு படைத்திருந்த முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.

12 முதல் 35 வாரங்கள் வரையிலான கர்ப்பகாலத்தில் உள்ள அந்தச் செவிலியர்களில் பலர், இந்தச் சிறப்பான நிகழ்வைக் கொண்டாடும் விதமாகவும் புகைப்படம் எடுத்துக்கொண்ட நிலையில் அந்த புகைப்படம் வைரலாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.