;
Athirady Tamil News

சிறைக்குள் நடத்தப்பட்ட பெரும் கொடூரம் ; மகன்களை இழந்து கதறி அழும் தாய் ; கண் கலங்க வைத்த சம்பவம்

0

நீர்கொழும்பு சிறைச்சாலையில் காயமடைந்த மற்றும் உயிரிழந்த கைதிகள் கொடூரமான தாக்குதலுக்கு இலக்காகியுள்ளமை குறித்து, சம்பவத்தில் தன் மகனை இழந்த தாயொருவர் கண்ணீர் மல்க விபரித்துள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற “மோதலின்” போது உயிரிழந்ததாகக் கூறப்படும் கைதி ஒருவரின் தாய் ஒருவர், வெளிநாட்டு செய்தி சேவையிடம் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

மகனை ஒப்படையுங்கள்..
“எனது மகன் உள்ளே இருக்கிறான். அவனுக்கு வலது கை இல்லை. அந்த மகனை என்னிடம் ஒப்படைக்குமாறு நான் கோருகிறேன்.

எனது மற்றுமொரு மகனும் உள்ளே இருக்கிறான். அவர்கள் அவனை அடித்துக் கொன்றுவிட்டனர். தலையை உடைத்து, கண்களில் குச்சிகளால் குத்தி, தீயிட்டுச் சுட்டு, எனது மகனுக்குப் புதியவர்களுக்கு வழங்கப்படும் வதையைகொடுத்துக் கொன்றுவிட்டனர்.

எனது மகனின் சடலம் இன்னும் நீர்கொழும்பு மருத்துவமனையிலேயே உள்ளது.” “எனக்கு நீதி பெற்றுத் தாருங்கள். அந்தப் பிள்ளையையாவது என்னிடம் ஒப்படைக்கச் சொல்லுங்கள்.

உயிருடன் இருக்கும் பிள்ளையையாவது என்னிடம் ஒப்படையுங்கள், நான் சட்ட ரீதியாக வழக்குகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்” என்று அவர் மேலும் உருக்கமாகத் தெரிவித்தார்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.